Wednesday, December 28, 2011

பாடல் 71: பாவி! மயக்கங் கொண்டிராதே


    இராகம்: காப்பி தாளம்: ஆதி

    பல்லவி

    பாவி! மயக்கங் கொண்டிராதே
    பல மாயையினாலே

    சரணங்கள்

1. தினமும் பரனடி மகிழ்ந்து நீ போற்று;
    சித்தப்படி யலையும் மனதையே மாற்று;
    சினமுள்ள கோபத்தை நெறியுடன் ஆற்று
    சேதமில்லாத வழி அறிந்து நீ சொல்லு - பாவி

2. சத்திய வழியினிற் சார்பதாய் நில்லு
    சர்ப்பனை இன்னதென்று திடம் பண்ணிக் கொள்ளு
    புத்திமதிகளைப் பிறருக்குச் சொல்லு
    பேயின் மா தந்திரத்தை அறிந்து நீ வெல்லு - பாவி

3. உலகத்தின் வாழ்வுகள் நெடுநாள் நில்லாதே
    உண்மை தவறினவனிடத்தில் செல்லாதே
    எவரையும் தந்திரத்தால் மோசம் பண்ணாதே
    இரட்சகர் புத்திதனை இகழ்ந்து தள்ளாதே - பாவி

4. மூடனுக்கறிவுதான் உரைத்தால் வெல்லாதே
    மூர்க்கன் வெறியனென்று பேரெடுக்காதே
    தேடாத் திரவியத்தைத் திருடிக்கொள்ளாதே
    தேவனுரை மறந்தால் சிட்சை பொல்லாதே - பாவி

No comments:

Post a Comment