Wednesday, December 28, 2011

பாடல் 36: இயேசுவின் மூலமாய் வரும் ஈவுகள்


    இராகம்: சஹானா தாளம்: மிஸ்ரம்

    பல்லவி

    இயேசுவின் மூலமாய் வரும் ஈவுகள் பாரும்! 
   
    சரணங்கள்

1. இயேசுவினுதிரம் விசுவாசிப்பவர்க்கெல்லாம்
    ஏற்ற சுத்தியாக்கும் அருந் தீர்த்தமே இதாம் - இயேசுவின்

2. சித்தம் வைத்து சுத்தஞ் செய்து அத்தன் நித்திய
    ஜீவனோடு பேரின்பமும் தாம் அருள்வார் - இயேசுவின்

3. தேவனோடு சேர்த்து உம்மை சோபிதமாக
    தேவ சுதனாக்கி அவர் சுதந்திரமீவார் - இயேசுவின்

4. அங்குமக்குக் கிருபை சமாதானமும் மிக
    பொங்கும் ஐஸ்வர்ய மிளைப்பாறுதலு முண்டு! - இயேசுவின்

5. ஆத்தும சந்தோஷமதால் அனவரதமும்
    ஆர்ப்பரித்து அட்சயனுக் கர்ச்சனை செய்வீர் - இயேசுவின்

6. சுத்த மறைக்குள் இதனைச் சோதனை செய்து
    சத்திய கிறிஸ்து பதம் சார்ந்து சுகிப்பீர் - இயேசுவின்

No comments:

Post a Comment