Friday, December 30, 2011

பாடல் 30: நேச தோழரே! எங்கள் ஊராரே!


    இராகம்: மோஹனம் தாளம்: திஸ்ரஏகம்

    பல்லவி

    நேச தோழரே! எங்கள் ஊராரே!
    நாச பாதை விட்டு இப்போ வரமாட்டீரோ?

    சரணங்கள்

1. பாவ ஜீவியம் நரக பாதையே!
    பாவி மனம் உடைந்து வந்தால் மீட்கப்படுவாயே - நேச

2. சுத்த ஜீவியம் மோட்ச பாதையே!
    யுத்தஞ் செய்து கிரீடம் பெற உத்தம வழி - நேச

3. சாத்தான் பொங்குகிறான் மாற்றான் துள்ளுகிறான்
    சீக்கிரத்தில் புறப்படுங்கள் தப்பிக்கொள்வீரே - நேச

4. குடிகாரரே! சிறைப்பட்டோரே!
    தேவ சுதன் சிறை மீட்க வல்ல இராஜனாம் - நேச

5. தூய ஆவியைப் பெற்று உய்யவே!
    தூதர் வாழ்த்தும் இயேசு இராஜன் பாதம் சேருங்கள் - நே

No comments:

Post a Comment