Thursday, December 22, 2011

பாடல் 105: என் இரட்சகா! என் தேவனே!


    O happy day that fixed my choice - 365
                    (Tune 37 of ESB)

    சரணங்கள்

1. என் இரட்சகா! என் தேவனே!
    உம்மை சேர்ந்த நாள் இன்பமே
    என்னுள்ளத்தின் சந்தோஷத்தை
    எங்குமே நான் ப்ரஸ்தாபிப்பேன்

    பல்லவி

    இன்ப நாள்! இன்ப நாள்!
    இயேசு என் பாவந்தீர்த்த நாள்!
    காத்து ஜெபிக்கக் கற்பித்தார்
    என்றும் சந்தோஷிக்கச் செய்தார்
    இன்ப நாள்! இன்ப நாள்!
    இயேசு என் பாவந்தீர்த்த நாள்!

2. வாக்குத்தத்தம் செய்திடுவேன்
    என் அன்புள்ள நாதருக்கே;
    அவரண்டை இருக்கையில்
    ஸ்தோத்திரங்கள் ஏறெடுப்பேன் - இன்ப நாள்

3. மா கிரியை நடந்ததால்
    கர்த்தரும் நானும் ஒன்றானோம்
    பின் சென்றிட அழைத்திட்டார்
    கீழ்ப்படிந்தேன் ஆனந்தமாய் - இன்ப நாள்

4. தத்தளிக்கும் என் மனமே
    கர்த்தரில் இளைப்பாறுவாய்;
    நன்மைகள் ஈந்த நாதரை
    ஓர்காலும் விட்டு நீங்கிடாய் - இன்ப நாள்

5. நாடோறும் என் வாக்குத்தத்தம்
    கேட்டிடும் உன்னத தேவா;
    ஜீவியத்தின் அந்தத்திலும்
    நான் பணிந்து போற்றிடுவேன் - இன்ப நாள்
                                                      Philip Doddridge

No comments:

Post a Comment