Alas! and did my Saviour Bleed
1. நான் உம்மைப்பற்றி இரட்சகா!
வீண் வெட்கமடையேன்
வீண் வெட்கமடையேன்
பேரன்பைக் குறித்தாண்டவா!
நான் சாட்சி கூறுவேன்
பல்லவி
சிலுவண்டையில்
நம்பி வந்து நிற்கையில்
பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்;
எந்த நேரமும், எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்
2. ஆ! உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்,
நீர் கைவிடீர்! இவ்வேழையை
காப்பீர் தேவாவியால் - சிலுவை
3. மாவல்ல வாக்கின் உண்மையை
கண்டுணரச் செய்தீர்;
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர் - சிலுவை
4. நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்;
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய் பாக்யம் அடைவேன் - சிலுவை
Isaac Watts (1674-1748, Southampton, Kingdom of England)
No comments:
Post a Comment