Thursday, December 22, 2011

பாடல் 107: அன்புள்ள நேசர் இயேசு


    I've found a friend in Jesus - 344
                 (Tune 819 of ESB)

1. அன்புள்ள நேசர் இயேசு, என்னெல்லாம் அவரே!
    பதினாயிரம் பேர்களில் சிறந்தோர்;
    தாம் பள்ளத்தாக்கின் லீலி, என்னெல்லாம் அவரே!
    எந்தன் ஆத்துமத்தின் பிராண நாயகர்;
    துக்கத்தில் என் ஆறுதல் துன்பத்தில் என்னின்பம்!
    எந்தன் கவலைகளெல்லாம் தாங்குவார்

    பல்லவி

    அவர் பள்ளத்தாக்கின் லீலி
    அவர் காலை விடி வெள்ளி
    பதினாயிரம் பேர்களில் சிறந்தோர்

2. என் சஞ்சலங்கள் நீங்க, என் பாவம் மா அன்பாய்
    சுமந்து அவர்தம் ஜீவனை விட்டார்;
    நான் யாவையும் வெறுத்தேனே என் நேச மீட்பர்க்காய்
    அவர் ஒருபோதும் கைவிடமாட்டார்;
    லோகம் என்னை வெறுத்து சாத்தான் சோதித்தாலும்
    மீட்பரே எனக்கு ஜெயம் தருவார்! - அவர்

3. கர்த்தாவின் சித்தத்துக்கு கீழ்ப்படிவேனானால்,
    எல்லாத் துன்பங்களையும் நான் சகிப்பேன்;
    எனக்குப் பயமென்ன? அவர் என் பங்கானால்!
    எந்தன் ஆத்துமத்தின் மன்னா இவரே!
    ஜீவ நதிகள் பாயும் சொர்க்கத்தைச் சேரையில்
    அவர் திரு முகந்தனை நான் காண்பேன்! - அவர்
                                                                  Charles Fry

No comments:

Post a Comment