Thursday, December 22, 2011

பாடல் 110: என் பரம பிதா


    My Father is rich in houses and lands - 354
                        (Tune 351 of ESB)

1. என் பரம பிதா அதிகாஸ்திபன்
    பூலோக வஸ்துக்கள் அவர் சொந்தமாம்;
    வெள்ளி, பொன், முத்துக்கள் இரத்தினக் கற்களும்
    சொல்லொண்ணா செல்வங்கள் எல்லாம் எந்தன் பங்கே!

    பல்லவி

    நானோர் இராஜ புத்ரன் (புத்ரி)
    நேச இயேசுவுடன்
    நானோர் இராஜ புத்ரன் (புத்ரி)

2. தேவ சுதன் இயேசு மானிட மீட்பர்
    பரதேசியாய்த் திரிந்து மரித்தார்;
    இப்போ மோட்சத்தில் பொற் கிரீடாதிபர்
    எனக்கும் சாவின் பின் மோட்சம் தந்திடுவார் - நானோர்

3. நான் துஷ்டப் பிள்ளையாய்த் திரிந்தேன் சின்னாள்
    பாவத்தில் பிறந்து, பாவி அலைந்தேன்
    தேவ மக்களில் இப்போ நான் ஒராள்
    பரலோகத்தின் பங்கையும் அடைந்தேன்! - நானோர்

4. வனமோ, குடிலோ? எல்லாம் ஒன்றுதான்,
    மேலே எனக்கோர் மாளிகை ஆயத்தம்!
    இங்கே பரதேசி! என்றும் பாடுவன்!
    அங்கே சத்தியன் நானோர் இராஜ புத்ரன் (புத்ரி) -
 நானோர்
                                                                             Hattie Buell

No comments:

Post a Comment