(Seeking for me - for me)
1. இயேசு என் மீட்பர் சண்டாளருக்காய்
பூமியிற் பிறந்தார் பாலகனாய்!
நீச மா பாவியைக் கருணையாய்
நீச மா பாவியைக் கருணையாய்
தேடிவந்தார் - வந்தார்!
பல்லவி
தேடிவந்தார் - வந்தார்;
தேடிவந்தார் - வந்தார்;
நீச மா பாவியைக் கருணையாய்,
தேடிவந்தார் - வந்தார்
2. பாவ மா பாரத்தை நீக்கிப் போட்டார்;
தீவினை போக்கவும் பாடுபட்டார்,
இயேசுவைப் போல் வல்ல இரட்சகர் யார்?
உயிரைத் தந்தார் - தந்தார் - தேடி
3. சிறியேன் பாவத்தின் மாய்கையினால்
புத்தியில்லாமலே அலையுங்கால்
நீசனை நினைத்து நேசித்ததால்
இரட்சை செய்தார் - செய்தார் - தேடி
4. இயேசு என் மீட்பர் வந்தருளுவார்;
வானத்தினின்றவர் இறங்குவார்!
மாட்சிமையோ டென்னைச் சேர்த்துக்கொள்வார்
வாழச் செய்வார் - செய்வார் - தேடி
E.E Hasty
No comments:
Post a Comment