Tuesday, December 20, 2011

பாடல் 120: ஆனந்தமுண்டெனக்கானந்தமுண்டு


    பல்லவி

    ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு - என்
    இயேசு மகாராஜா சந்நிதியில்

    சரணங்கள்

1. இந்த புவி ஒரு சொந்தம் அல்ல என்று
    இயேசு என் நேசர் மொழிந்தனரே
    இக்கட்டுத் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
    இங்கேயே பங்காய்க் கிடைத்திடினும் - ஆனந்தம்

2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே!
    காரணமின்றி கலங்கேனே யான்
    விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திட
    மேவியே சுக்கான் பிடித்திடுமே! - ஆனந்த

3. என் உள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?
    கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது;
    சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
    ஜெயகீதம் பாடி மகிழ்ந்திடலாம்! - ஆனந்த
   
4. கூடாரவாசிகளாகும் நமக்கிங்கு
    வீடென்றும், நாடென்றும் சொல்லலாமோ?
    கை வேலையல்லாத வீடொன்றை மேலே நான்
    செய்வேன் என்று இயேசு போகலையோ? - ஆனந்த

5. துன்பங்கள், தொல்லை, இடுக்கண், இடர், இவை
    தொண்டர் எமை அண்டி வந்திடினும்
    சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை
    துன்பத்தினூடே அனுப்பிடுவார்! - ஆனந்த

6. இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்!
    ஏழை வெகுவாய் கலங்குறேனே;
    என் நேசர் தன்முக ஜோதியே யல்லாமல்
    இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை - ஆனந்

No comments:

Post a Comment