Tuesday, December 20, 2011

பாடல் 121: வள்ளால் உம்மைத் தேடிதேடி


    இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ராகம்

    பல்லவி

    வள்ளால் உம்மைத் தேடிதேடி வாறேனையனே!
    அனுபல்லவி

    தள்ளாடும் என் நெஞ்சைத் தேற்றி
    தாங்கும் மெய்யனே

    சரணங்கள்

1. என்மேல் கொண்ட உமது நேசம் என்ன நேசமோ!
    இந்நேசமே என்னை உம்மோடிழுக்கும் நேசமோ! -
வள்ளால்

2. ஐயா! உம்மையல்லாதெனக்கு ஆரும் வேண்டாமே
    மெய்யா யுமதண்டை நித்திய ஜீவனுண்டாமே! - வள்ளால்

3. அப்பா! உம்மை அடைய எனக்கு ஆசை பொங்குதே
    அடைவேனென நம்பி எந்தனாவி தங்குதே! - வள்ளால்

4. தந்தேனெனை உந்தனுக்குச் சொந்தமாகவே;
    வந்தே எனதுள்ளந்தனில் வசியுமென் கோவே! - வள்ளால்

No comments:

Post a Comment