Tuesday, December 20, 2011

பாடல் 122: ஆனந்தமே! பரமானந்தமே!


    இராகம்: சங்கராபரணம் தாளம்: ஆதி

    சரணங்கள்

1. ஆனந்தமே! பரமானந்தமே! - இயேசு
    அண்ணலை அண்டினேன் ஆனந்தமே!
    ஞான இரட்சகரென் பாவம் மன்னித்ததால்
    ஆனேனவருக்குள்ளானந்தமே! - ஆனந்தமே

2. வீணாகக் காலமும் நான் கழித்தேன் - வழி
    தோன்றாமல் நின்றுமே நான் விழித்தேன்!
    காணாத ஆடெனைக் கண்டு சுமந்த - என்
    காதலன் தோள் எனக்கானந்தமே! - ஆனந்தமே

3. நாடியே பாவத்தைத் தேடியே புரிந்து,
    நைந்து கரைந்து மனம் மெலிந்து,
    வாடியே தவித்த ஏழை என் பாவத்தை
    நாடியே மன்னித்தார் நம்பினேனே! - ஆனந்தமே

4. பாவ வலையிலகப்பட்டுழன்ற - என்
    பக்கமே வந்து கரந்தூக்கி,
    ஜீவ பாதையில் வழி நடத்தி - நிதம்
    தேற்றி வருகிறார் ஆனந்தமே - ஆனந்தமே

5. இந்த நன்றியை நான் மறவேன் - எந்தன்
    யாவையும் பூசையாய் நான் படைத்தேன்
    அந்தம்வரை இயேசு சுவாமிக்குத் தொண்டனாய்
    ஆகவே தீர்மானம் ஆனந்தமே! - ஆனந்தமே

No comments:

Post a Comment