இராகம்: பியாகு தாளம்: ஆதி
பல்லவி
பாவிக்கு நேசராரே!
இரட்சண்ய மூர்த்தியாரே! - ஆ இவர்!
சரணங்கள்
1. மாசற்ற தேவனார் மனு அவதாரரே!
பாவியின் பிராண நாதரே!
பாவியின் பிராண நாதரே!
இரட்சண்ய மூர்த்தியாரே! - ஆ இவர் - பாவிக்கு
2. நெரிந்த நாணல் முறியார், பொரிந்த திரி அவியார்,
நிர்ப்பந்தரைத் தள்ளாரே!
இரட்சண்ய மூர்த்தியாரே! - ஆ இவர் - பாவிக்கு
இரட்சண்ய மூர்த்தியாரே! - ஆ இவர் - பாவிக்கு
3. பிரயாசத்தோடே பாரஞ்சுமப்பாரே;
வாரும் இரட்சை ஈவாரே!
இரட்சண்ய மூர்த்தியாரே! - ஆ இவர் - பாவிக்கு
No comments:
Post a Comment