Tuesday, December 20, 2011

பாடல் 125: இரட்சிப்பைக் கொண்டு


    சரணங்கள்

1. இரட்சிப்பைக் கொண்டு
    உச்சிதப் பட்டணம்
    பட்சமுடன் செல்லுவோம் - அங்கே
    பரலோகப் பங்கை பங்கிட்டுக் கொள்வோம்
    பரமனுதவியாலே

2. உலகத்தின் வாழ்வை
    பொய்யென்று விட்டு
    பரமன் பதத்தைத் தொட்டு - என் ஐயா
    பாக்கியம் பெற்றேன்; பாவத்தை விட்டேன்
    பரிசுத்தன் பலத்தாலே

3. மறையோனை வெறுத்து
    பாவத்தைத் தொடுத்து
    மாய வலையிலுட்பட்டு - என் ஐயா
    மயங்கித் திரிந்தேன், மருள விழுந்தேன்
    மன்னித்துக் கொண்டாரே

4. பாவத்தைச் செய்து
    காலத்தைக் கழித்தால்
    சாபத்துள்ளாவீரே! - என் ஐயா
    பாவத்தின் சம்பளம் மரண மென்றறிந்து
    பற்றிடும் ஜீவன் இன்று!

5. இயேசுவின் அழைப்பை
    காதினாற் கேட்டும்
    கடினமானாலுள்ளம் - பாவி
    தப்புவாயோ நீ? தண்டனை அடைவாய்!
    தற்பரன் கரத்தாலே

No comments:

Post a Comment