Tuesday, December 20, 2011

பாடல் 126: மருந்து கண்டேனே


    பல்லவி

    மருந்து கண்டேனே - நானொரு
    மருந்து கண்டேனே

    சரணங்கள்

1. வருத்தும் பிணிகளை வாட்டும் மருந்து
    வளர் பெத்லகேமில் வந்த மருந்து
    திருச் செயல்களைச் செய்த மருந்து,
    தீன தயாபரனாகிய மருந்து! - மருந்து

2. ஆவுகள் கொட்டிலில் பிறந்த மருந்து
    அன்பாக மேய்ப்பர் ஆராதித்த மருந்து
    பாவம் போக்க இரத்தஞ் சிந்தின மருந்து
    பரிசுத்தரான மெஞ்ஞான மருந்து! - மருந்து

3. தீர்க்க தரிசிகள் உரைத்த மருந்து,
    தீவினை யாவையும் தீர்க்கும் மருந்து
    மூர்க்கர் கையிலகப்பட்ட மருந்து,
    மூவரி லொருவரான மருந்து! - மருந்து

4. பிசாசின் தலையை நசுக்கும் மருந்து!
    பூரண விடுதலை தந்த மருந்து
    கூசாமல் அற்புதஞ் செய்த மருந்து
    குருவாகப் புவியிலுதித்த மருந்து! - மருந்து

No comments:

Post a Comment