இராகம்: சங்கராபரணம் தாளம்: ஆதி
பல்லவி
என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!
சொல்லக்கூடாதே!
சொல்லக்கூடாதே!
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே!
சரணங்கள்
1. கூடுவோம் யாவரும் பாடுவோம் நன்றாய்,
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம் - என்ன
2. பாவங்கள், சாபங்கள், கோபங்களெல்லாம்
பரிகரித்தாரே;
தேவாதி தேவன் எம் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே! - என்ன
3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்
கருளின தாலே,
நித்திய சுவாமியைப் பற்றியே சாட்சி
பகர வேண்டியதே - என்ன
4. வெண்ணங்கி, பொன்முடி, வாத்தியம், மேல் வீட்டில்
ஜெயக் கொடியுடனே,
மண்ணுலகில் வந்து விண்ணுலகிற் சென்ற
மன்னனை ஸ்தோத்திரிப்போம் - என்ன
No comments:
Post a Comment