Tuesday, December 20, 2011

பாடல் 132: எந்தன் சம்பத்தென்று சொல்லவே


    இராகம்: அல்லேலூயா வென்று (நாதநாமக்கிரியை) தாளம்: திஸ்ரசாப்பு

    பல்லவி

    எந்தன் சம்பத்தென்று சொல்லவே - வேறொன் றில்லையே
    இயேசு மாத்திரம் சம்பத்தாவாரே!

    அனுபல்லவி

    சாவை வென்று உயிர்த்தெழுந்தார் - வான லோகமதிற் சென்றார்
    பாவியாம் எனக்காய் என்றும் தாதையுடன் யாசிக்கின்றார்

    சரணங்கள்

1. குருசிலெனக்காய் மரித்தாரே - க்ரூரவதையாய்
    சொர்க்க கானான் சேர்க்கவெனையே
    பாவம் நீக்கி சாபம் மாற்றி, சாவின் மேலும் ஜெயம் நல்கி
    வேகம் வாறே னென்றுருதி வார்த்தை கூறி ஏறிச் சென்றார் - எந்தன்

2. இயேசுவுக்காய் சர்வ சம்பத்தும் யாகமாய் வைத்து
    என்றென்றும் அவரில் நேசமாய்,
    இயேசுவுக்காய் வேலை செய்து என் சிலுவையை எடுத்து
    பிராண நாதர் சேவையில் என்னாயுளெல்லாம் கழிப்பேனே - எந்தன்

3. உத்தம ஊழியன் என்னும் நான் - அத்தன் முன்பாக
    எத்தகைய வெட்கமின்றியே;
    பக்தியோடென் அன்பர் முன்பில் ஆனந்த புஷ்பஞ் சொரியும்
    பாக்யமேறும் மகோற்சவ வாழ்வுகாலம் வந்திட்டதே - எந்தன்

4. ஆட்டுக்குட்டியாமென் நேசரின் - சாலேம் நகரின்
    நாட்டமுரும் வாசம் திட்டமாம்!
    லோகமென்னைக் கைவிடினும், தேகம் மெலிந்துருகினும்
    துக்கம் சிறிதேனும் கொள்ளேன், இயேசுவையே பின்தொடர்வேன் - எந்தன்

5. எந்தன் தேசம் இப்புவியென்று - அன்யனாம் சாது!
    சொந்த தேசம் நாடினேன் நன்று;
    திகழுறு சாலேமென்னை மகிழ்வுடன் வரவேற்க
    மகிமையாம் வாசல்கள் தம் தலைகளை உயர்த்திடும் - எந்தன்

No comments:

Post a Comment