இராகம்: ஹரிகாம்போதி தாளம்: திஸ்ரசாப்பு
பல்லவி
எத்தனை நாவால் துதிப்பேன் - ஏதும்
அற்ற மா பாவி நான் பெற்ற கிருபைக்காய்!
அனுபல்லவி
பித்தனாம் பேயின் அடிமைத்தனத்தில்
பிடிபட்ட பாவியை மீட்டதற்காக
சரணங்கள்
1. பாவத்தில் ஜனிப்பிக்கப்பட்டேன் - பின்னும்
பலவித ஆங்காரங் கொண்டு நடந்தேன்;
ஆபத்தில் பலமுறை அகப்பட்ட பாவியை
அழித்துப்போடாமலே வைத்ததற்காக - எத்தனை
2. குடிவெறி களியாட்டுச் செய்தேன் - வாயால்
கோட் சொல்லிக் கோபங்கள் மூட்டியே விட்டேன்
அடியேனை மீட்பதற்காகவே இயேசு
அற்புத நாதரைக் கொடுத்ததற்காக - எத்தனை
3. பாதகரோடு சஞ்சரித்தேன் - நாவால்
பரியாசம் பண்ணியே நாட்களைக் கெடுத்தேனே;
தீதான பாதகர் கூட்டத்தை விட்டு
தேவதாசர்களோடு சேர்த்ததற்காக - எத்தனை
4. உலகத்தைப் பலகாலஞ் சுமந்தேன் - பின்னும்
உறவின் முறையாரைச் சிலகாலஞ் சுமந்தேன்
அலகைப்பயல் போட்ட வலை யாதென்றுணர
அடியேனுக்காவியின் அருள்வரம் கொடுத்தீர் - எத்தனை
5. பதினோராம் மணி நேரம் மட்டும் - கெட்ட
பாவி நான் பாவத்தில் தூங்கிக்கிடந்தேன்;
எதிரொலி ஓசைபோல் மனந்திரும்பென்ற
எக்காள சத்தத்தைக் கேட்டு எழுந்த நான் - எத்தனை
No comments:
Post a Comment