Monday, December 19, 2011

பாடல் 135: இரத்தஞ் சிந்தி நம்மை அவர்

    பல்லவி

    இரத்தஞ் சிந்தி நம்மை அவர்
    முத்தி சேர்க்கப் பிறந்தார்

    அனுபல்லவி

    நித்தம் அவரோடு வாழ சத்ய வழி திறந்தார்
    கர்த்தரே தம் பக்தர் பாவம் மறந்தார்

    சரணங்கள்

1. மோசத்துக்குள்ளான என்னை
    இயேசு சுவாமி பார்த்தார்;
    நாசத்திருந்தோடி வந்த,
    நீசனையே சேர்த்தார்,
    நேச மீட்பர் பாசமாகக் காத்தார் - இரத்தம்

2. கெஞ்சி வந்த பாவிகட்காய்
    தஞ்சமாய் நின்றார்;
    மிஞ்சி மோசஞ் செய்யும் அந்த
    வஞ்சப் பேயைக் கொன்றார்
    கொஞ்சமுமே அஞ்சிடாமல் வென்றார்! - இரத்தம்

3. பொன்னுலகத் தின்பங்களை
    என்னுள்ளத்தில் தந்தார்;
    தன்னுடன் நற்பங்கு பெற
    மன்னர் என்மேல் உவந்தார்;
    சின்னப்பட இந்நிலத்தில் வந்தார் - இரத்தம்

4. துன்பம் வரும் வேளையினில்
    இன்பமே கொண்டாடுவோம்;
    தம்பிரானும் எம்மேல் வைத்த
    அன்பின் நேசம் பாடுவோம்;
    அம்பரத்தில் நண்பருடன் கூடுவோம்! - இரத்தம்

1 comment:

  1. THanks mappillai , for all tamil songs when i sing these song i remember my golden old days with my dad ...and our family prayer and childhood days

    ReplyDelete