Monday, December 19, 2011

பாடல் 136: என்ன செய்குவேன் ஏழையடியேன்

    இராகம்: மார்க்கீக ஹிந்தோளம் தாளம்: ஆதி

    பல்லவி

    என்ன செய்குவேன் ஏழையடியேன்

    அனுபல்லவி

    அண்ணலேசையா - அற்பனானையா
    என்னைப்பொருளாய் - எண்ணினதற்கீடாய்

    சரணங்கள்

1. அஞ்ஞானத்தில் தானே - அமிழ்ந்திருந்தேனே!
    அகக் கண்கெட்டு - அலைந்தேன் முற்றுமே;
    மெஞ்ஞான மூட்டி - வெளிச்சமுங் காட்டி
    என்னை இரட்சித்தாய்! இதற்கு நான் ஈடாய் - என்ன

2. மாமிச இச்சை - லோகம் பேராசை
    மயக்கங் கொண்டு - மாசில் புரண்டு
    தீமைபுரியச் சென்றோனை வலியத்
    திருப்பி இழுத்த - செயலிதற்கு ஈடு - என்ன

3. செத்த நான் பிழைக்க - ஜீவனை அளிக்க
    திவ்ய நாதனே - தேவ சுதனே
    மெத்தப் பாடுபட்டு - மீட்க என்னையே
    சித்தம் வைத்தாயே - சேயன் இதற்கு ஈடு - என்ன

4. ஆத்மா தேகம் ஆவி - அனைத்தும் இப்பாவி,
    மீட்பா இயேசுவே! மேசியா கோவே!
    பூர்த்தியாகவே படைத்தேனே தேவே!
    ஏற்றுக்கொள்ளையா - ஏழையைக் காரையா! - என்ன

No comments:

Post a Comment