Monday, December 19, 2011

பாடல் 141: அற்புத அற்புதமான ஓர் நாள்


    O! What a Wonderful wonderful day - 371

1. அற்புத அற்புதமான ஓர் நாள்
    நான் மறவாத நல் நாள்
    இருளில் நான் அலைந்து போனபின்
    இரட்சகரை சந்தித்தேன்;
    என்ன மா இரக்கமான நண்பர்.
    என் தேவையை சந்தித்தார்;
    நிழலை நீக்கி இருளை அகற்றினார்;
    இன்பமாய் இதைச் சொல்வேன்!

    பல்லவி

    மோட்சம் இறங்கி மகிமையால் நிரப்பிற்று
    சிலுவையண்டை இயேசு சுகமாக்கினார்
    இரவை பகலாக்கினார், என் பாவத்தை கழுவினார்;
    மோட்சம் இறங்கி மகிமையால் நிரப்பிற்று!

2. நான் பிறந்தது தேவ ஆவியால்
    தெய்வீகக் குடும்பத்தில்
    கல்வாரி அன்பால் நீதிமான் ஆனேன்
    என்ன மேன்மை என் நிலை!
   
காரியம் சீக்கிரமாய் நடந்தது,
    பாவியாய் வந்த போது;
    கிருபையாய்க் கொடுத்தார் நான் அதை எடுத்தேன்
    என்னை மீட்டார் தோத்திரம் - மோட்சம்

3. நிலைக்கும் நம்பிக்கை என்னிலுண்டு
    காலமும் கடந்த பின்;
    மோட்சத்தில் என்றென்றுமே ஜீவிப்பேன்;
    வாசஸ்தலம் அங்குண்டு!
   
அற்புதமான அந்நாள் நிமித்தம்
    குருசை விசுவாசித்தேன்;
    நித்திய ஐசுவரியம் மேலான பாக்யங்கள்
    அவர் கையாலே பெற்றேன் - மோட்சம்

     (தமிழ் மாகாண முதல் மாநாடு சிறப்புக்கீதம்)


     John W Peterson 1921-2006 (Lindsborg, USA)

No comments:

Post a Comment