இராகம்: சங்கராபரணம் தாளம்: திஸ்ரஏகம்
பல்லவி
போற்றித் துதிப்போமே - இரட்சகனை
ஏற்றித் துதிப்போமே
அனுபல்லவி
போற்றித் துதித்துமே ஏற்றித் துதித்துமே
பொற்பரனை எங்கள் தற்பரனை நாம்
சரணங்கள்
1. சுவர்க்கத்தை விட்டவனை, புவியினில் வந்து உதித்தவனை
பாவிகளின் பெரும் பாவந்தனைப் போக்கப்
பாரினில் பாலகனாக வந்தவனை - போற்றி
2. பெத்லேகில் உதித்த பெரும் பாவிகளின் நேயனை
கெத்சமனே தனில் பாவிகளுக்காகக்
கண்ணீர் விட்டு ஜெபம் செய்தவனை நாம் - போற்றி
3. கல்வாரியின் அரசை எங்கள் சபைத்தலையாம் இயேசையனை
ஈனக் குருசிலறையுண்டிருந்த நல்
இயேசையனை, எங்கள் மேசியாவை, நாம் - போற்றி
4. பெந்தெகொஸ் தென்னாளில் ஒன்றாய்க் கூடிப் பிரார்த்தித்த அந்நாளில்
வல்லமையான விதமாக ஆவியை
வருஷித்து ஆசீர்வதித்தவனை நாம் - போற்றி
வருஷித்து ஆசீர்வதித்தவனை நாம் - போற்றி
No comments:
Post a Comment