Thursday, December 15, 2011

பாடல் 152: பரிசுத்த பரனே துதியுமக்கு


    பல்லவி

    பரிசுத்த பரனே துதியுமக்கு
    பரலோகம் விட்டவரே துதியுமக்கு

    சரணங்கள்

1. நரர் சிறை விடுக்க, சுரர் புகழ் வெறுத்த
    திருமறை முடிவே, துதியுமக்கு
    திருச்சித்தம் செய்ய நரரூபாய் வந்தவா
    கருணையின் கடலே துதியுமக்கு - பரிசுத்த

2. தலைதானும் வைக்க நிலையின்றித் திரிந்தாய்
    நிலையே, நிதியே, துதியுமக்கு
    கெத்சமனேயிலதி துயர் கொண்டாய்
    அதிசய அன்பே துதியுமக்கு - பரிசுத்த

3. அன்னாவின் மனையில் கன்னத்திலறைய
    சின்னப்பட்டவரே துதியுமக்கு
    முகத்தினில் துப்பி முதுகினிலடித்த
    பகைவர்க்கு மன்னித்தாய், துதியுமக்கு - பரிசுத்த

4. நெடுங்குருசேறி கடுந்துயர் கொண்டு
    மடிந்த என் சிரசே, துதியுமக்கு
    மரணத்தை வென்ற காரணத்தால் இந்த
    தருணத்தில் மிகுந்த துதியுமக்கு - பரிசுத்

No comments:

Post a Comment