பல்லவி
போற்றித் துதி புகழ்ந்து துதி - உந்தன்
பரிசுத்த நாயகனை ஏற்றித் துதி
சரணங்கள்
1. தந்தார் இயேசு சுதனை எங்களுக்காய் - இந்தத்
தரணிதனில் போகவிட்டார் மானிடர்க்காய்
கன்ம வினையெல்லாம் தீர்க்க வந்தார் - பொல்லாக்
கருமங்கள் யாவையும் போக்க வந்தார் - போற்றி
2. தீராத விஷமெல்லாம் தீர்க்க வந்தார் - நாம்
தீயி லகப்படாமல் தூக்க வந்தார்;
பாவத்தில் மரித்தோரை உயிர்ப்பிப்பார் - நித்திய
பாதாளத்தில் போவோரைத் தப்புவிப்பார் - போற்றி
3. பொல்லாத உலகத்தின் மாய்கையாலே - சாத்தான்
போதிக்கிறான் உன்னை வாதிக்கிறான்
நில்லாதே பாவி நீ நில்லாதே - அங்கே
நிற்கும் அந்தப் பாதை தான் பொல்லாததே - போற்றி
4. மேலான இரட்சிப்பை கூறுகின்ற - இந்த
மேன்மையுள்ள இரட்சகரைப் பாராயோ,
வாராயோ பாவி நீ கேளாயோ? இப்போ
பராபரனை வந்து சரண் அடையாயோ? - போற்றி
பராபரனை வந்து சரண் அடையாயோ? - போற்றி
No comments:
Post a Comment