Thursday, December 15, 2011

பாடல் 162: எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்


    பல்லவி

    எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
    நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
    இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
    எந்த வேளையிலும் துதிப்பேன்

    அனுபல்லவி

1. ஆதியும் நீரே - அந்தமும் நீரே
    ஜோதியும் நீரே - என் சொந்தமும் நீரே - எந்த

2. தாய் தந்தையும் நீரே - தாதையும் நீரே
    தாபரம் நீரே - என் தாரகம் நீரே - எந்த

3. வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே
    வாதையில் நீரே - என் பாதையில் நீரே - எந்த

4. வானிலும் நீரே - பூவிலும் நீரே
    ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே - எந்த

5. துன்ப நேரத்தில் - இன்பமும் நீரே
    இன்னல் வேளையில் - என் மாறாநேசரே - எந்த

6. ஞான வைத்தியராம் ஔஷதம் நீரே
    ஆத்ம நேசராம் - என் நண்பரும் நீரே - எந்த

7. ஞானமும் நீரே - கானமும் நீரே
    தானமும் நீரே - என் நாதனும் நீரே - எந்த

8. ஆறுதல் நீரே - ஆதாரம் நீரே
    ஆசையும் நீரே - என் ஆனந்தம் நீரே - எந்த

9. மீட்பரும் நீரே - என் மேய்ப்பரும் நீரே
    மேன்மையும் நீரே - என் மகிமையும் நீரே - எந்த

10. தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே
      ராஜ ராஜனும் -  என் சர்வமும் நீரே - எந்த

No comments:

Post a Comment