இராகம்: யமுனா கல்யாணி தாளம்: ரூபகம்
பல்லவி
ஆசையாகினேன், கோவே உமக்
கனந்த ஸ்தோத்திரம், தேவே
அனுபல்லவி
ஏசு கிறிஸ்து மா சத்துவத்து ரட்சகா, ஒரே தட்சகா
சரணங்கள்
1. வேதா, ஞானப்பர்த்தா - என் - தாதா; நீயே கர்த்தா;
மா தாரகம் நீ என்றே, பரமானந்தா, சச்சிதானந்தா - ஆசை
2. கானான் நாட்டுக் கரசே - உயர் - வான் நாட்டார் தொழும் சிரசே!
நானாட்ட முடன் தேடி, தேடி நாடி பதம் பாடி - ஆசை
3. வீணாய்க் காலம் கழித்தேன் - சற்றும் - தோன்றாமல் நின்று விழித்தேன்
காணாதாட்டைத் தேடி சுமந்த கருத்தே என்னைத் திருத்தே - ஆசை
4. வந்தனம், வந்தனம், யோவா! - நீ சந்ததம் சந்ததம் கா, வா;
விந்தையாய் உன்னைப் பணிந்தேன்; சத்ய வேதா, இயேசுநாதா - ஆசை
வே. சா
வே. சா
No comments:
Post a Comment