(சங்கீதம் 103)
இராகம்: ஆனந்தபைரவி தாளம்: ஆதி
பல்லவி
ஆத்துமமே என் முழு உள்ளமே - உன்
ஆண்டவரைத் தொழுதேத்து இந்நாள் அள
வன்பு வைத் தாதரித்த - உன்
ஆண்டவரைத் தொழு தேத்து
சரணங்கள்
1. போற்றிடும் வானோர் பூதலத் துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள - ஆத்துமமே
2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத - ஆத்துமமே
3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொருத்தருளும் மேலான - ஆத்துமமே
4. வாதை நோய் துன்பம் மாற்றி அனந்த
ஓதரும் தயை செய் துயிர் தந்த - ஆத்துமமே
5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் - ஆத்துமமே
6. துதி மிகுந்தேற ஸ்தோத்திரி தினமே!
இதயமே உள்ளமே என் மனமே - ஆத்துமமே
தை. றை
No comments:
Post a Comment