இராகம்: சுருட்டி தாளம்: ஆதி
பல்லவி
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் - ஆதி
திரியேக நாதனுக்கு சுப மங்களம்
அனுபல்லவி
பாரேறு நீதனுக்கு பரம பொற் பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு
சரணங்கள்
1. ஆதி சருவேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதி பரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனு வேலனுக்கு - சீர்
2. மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக்கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல் நேயனுக்கு கன்னிமேரி சேயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு - சீர்
3. பத்து லட்சணத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்கு சருவாதி காரனுக்கு
பக்தர் உபகாரனுக்கு பரம குமாரனுக்கு - சீர்
வே. சா
No comments:
Post a Comment