Saturday, December 10, 2011

பாடல் 170: வேறு ஜென்மம் வேணும்


    இராகம்: கரகரப்பிரியை தாளம்: ஆதி

    பல்லவி

    வேறு ஜென்மம் வேணும் - மன
    மாறுதலாகிய உள்ள சுத்தி எனும்

    சரணங்கள்

1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்
    தேறுதலான விண் பேறு பெற இங்கே - வேறு

2. பாவ சுபாவமும் ஜீவியமும் மாறி
    தேவனின் சாயலை மேவுவதாகிய - வேறு

3. மானிடரின் அபிமானத்தினாலல்ல
    வானவரின் கிருபானந்தமாய் வரும் - வேறு

4. ஒன்றான இரட்சகர் வென்றியை நம்பி
    மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய - வேறு

5. மைந்தர் கெடாம லுகந்து ஈடேறவே
    சொந்த மகன் தனைத் தந்த பிதா அருள் - வேறு

6. மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்
    விண்ணினில் சுத்தராய் தண்ணொளி கொள்ளவும் - வேறு

No comments:

Post a Comment