Art thou weary, art thou languid? 228
(Tune 461 of ESB)
1. துக்க பாரத்தால் இளைத்து
நொந்து போனாயோ?
இயேசு உன்னைத் தேற்றிகொள்வார்
வாராயோ?
2. அன்பின் ரூபகரமாக
என்ன காண்பித்தார்?
அவர் பாதம் கை விலாவில்
காயம் பார்!
3. அவர் சிரசதின் கிரீடம்
செய்த தெதனால்?
ரத்தினம் பொன்னாலுமல்ல
முள்ளினால்!
4. கண்டு பிடித் தண்டினாலும்
என்ன வருமோ?
கஷ்டம் பாடு கண்ணீருண்டு
காண்பாயே
5. அவரைப் பின் பற்றினோர்க்கு
துன்பம் மாறுமோ?
சாவின் கூறும் மாறிப்போகும்!
போதாதோ?
6. பாவி என்னை ஏற்றுக் கொள்ள
மாட்டேன் என்பாரோ?
விண் மண் ஒழிந்தாலும் என்னைத்
தள்ளாரே!
Stephen the Sabaite
No comments:
Post a Comment