Friday, December 30, 2011

பாடல் 25: தேவ அன்பின் பெருக்கைப் பார்


    God loved the World - 46

1. தேவ அன்பின் பெருக்கைப் பார்!
    மேல் வீட்டை இயேசு விட்டார்;
    மா பாடனுபவித்தார்
    பாதகமுள்ள லோகத்தாரை
    பாவத்தினின்று மீட்க

    பல்லவி

    அற்புதமான நேசந்தான்!
    அவரன்பு எனக்கு;
    தேவ குமாரன் எனக்காய்
    உதிரம் சிந்தினார்

2. நிந்தை எனக்காய் சகித்தார்
    பாவங்கள் எல்லாம் சுமந்தார்
    மன்னிக்கும்படியாக
    பாவம் பயம் தேவ கோபம்
    யாவற்றையும் நீக்க - அற்புதமான

3. பேயின் வலைகள் கிழிந்திட,
    சாவின் கூர் ஒடிந்திட
    என் நேசர் மரித்தார்
    பரிசுத்தமாய் ஜீவிக்க
    இரட்சிப்பைத் திறந்தார் - அற்புதமா

No comments:

Post a Comment