இராகம்: நாதநாமக்கிரியை தாளம்: ஏகம்
இயேசு நாதர் - கிறிஸ்தேசு நாதர் - உந்தன்
இரட்சண்ய மூர்த்தி யவரேயாவார்
1. ஆதியிலேதான் வனத்தினின்று - ஏவை
ஆதஞ் செய்த பாவந் தீர்க்க வென்று - தரை
மீது கெத்சமனே வனஞ் சென்று - இரத்த
வேர்வை சிந்தி மிக்க வியாகுலங் கொண்ட - இயேசு
2. ஸ்திரீயின் விழுதலால் ஜெக மக்கள் - உற்ற
ஜென்ம கன்ம பாவங்கள் போக்க - ஒரு
ஸ்திரீயின் வித்தாய் இவ்வுலகில் பிறக்க - திருச்
சித்தங்கொண்ட தேவ குமாரனான - இயேசு
3. விலக்கப்ட்ட மரக்கனி புசித்து - பரன்
வெறுப்பை யடைந்த யிந்தப் பூவுலகத்து - வந்து
சிலுவை மரத்தையும் தன் தோளிலெடுத்து - சுமை
சுமந்து தீர்த்த மத்தியஸ்தனான - இயேசு
4. மண்ணிலிருந்துண்டான முதலாதாம் - செய்த
மா பாவங்கள் நீக்கி இரண்டாமாதாம் - ஆக
விண்ணிலிருந்துண்டாகி மெய்ப்போதஞ் செய்து
மேதினியை மீட்ட சற்குருவாம் - இயேசு
K.S. Abraham
No comments:
Post a Comment