இராகம்: குந்தலவராளி தாளம்: ஆதி
பல்லவி
வாரும் கிறிஸ்துவண்டை நேரே - பூரணவிசு
வாசமுண்டால் இரட்சை ஈவாரே
அனுபல்லவி
பாரும் கிறிஸ்து பட்ட
பாட்டின் பலன்கள் கிட்ட
சரணங்கள்
1. பாவப் பாரங்கள் சுமந்தாரே - கெத்சமனேயின்
காவில் தேற்ற பலப்பட்டாரே;
ஆவி மிக வருந்த ஆச்சே வேர்வை இரத்தமாய்! - வாரும்
2. தேவ தூஷணங்களைச் சாற்ற - நிர்மலனும்
தேவ நீதியை நிறைவேற்ற
கோவே முண்முடி சிரங்கொண்டா ரடிகளுரம்! - வாரும்
3. பாரக் குருசு ஏற்றினாரே - கால் கரங்களில்
சேர ஆணி கடாவினாரே;
நேரே விலாவில் குத்துண்டாரே நரர் பிழைக்க! - வாரும்
4. துங்கன் மேனியலைந்து காயம் - பாவிகளுக்கு
அங்கே அடைக்கல சகாயம்;
நொந்து சிலுவையடி பொங்கு முதிரந்தேடி! - வாரும்
5. எல்லாம் முடிந்த தென்று ஆவிவிட்ட மூன்றாம் நாள்
வல்லானுயிர்த்துப் பரமேகி
நல்லான் பரிந்து பேசி நாடித்தேடுறா ரும்மை - வாரும்
No comments:
Post a Comment