இராகம்: கௌசிகை தாளம்: ஆதி
பல்லவி
ஆயத்தமாயிருங்கள் எதிர்போக - அறி
யாத நேரம் வருவார் மணவாளன்
சரணங்கள்
1. மாய பாச வினைகள் மாய்த்துவிட்டு - மனம்
மாறி நல் அகச்சுத்தம் மருவிக்கொண்டு - ஆயத்தமாயிருங்கள்
2. இயேசுவை நண்பனாய் ஏற்றுக்கொண்டு - அவர்
ஈயும் மெய்ச் சமாதானம் பெற்றுக்கொண்டு - ஆயத்தமாயிருங்கள்
3. சத்திய வேத போதனையில் - நடந்து
உத்தமராய்த் தேவபக்தராய் - ஆயத்தமாயிருங்கள்
4. ஜீவ கனி புசித்து திருப்தி கொள்ள - நித்ய
ஜீவ தண்ணீர் குடித்து சுகித்திருக்க - ஆயத்தமாயிருங்கள்
5. நித்திய ஆனந்த பாக்கியங்கள் - நல்ல
நேய மணவாளனோடனுபவிக்க - ஆயத்தமாயிருங்கள்
No comments:
Post a Comment