பல்லவி
மீட்படை தாமதம் செய்யாதே
மீட்படை இன்றே!
சரணங்கள்
1. மீட்பர் உன்னை இன்று ஆவலாய்த் தேடுகிறார்!
மாட்டேனென்று சொல்லிப் போய்விடாதே - மீட்படை
மாட்டேனென்று சொல்லிப் போய்விடாதே - மீட்படை
2. பாதகங்கள் மிக்க மிக்கவே செய்த நான்
நாதரேசு பாதம் சென்றேன்; மீட்டார் - மீட்படை
3. பாவி பாவி பாவி என்றுனை எண்ணினால்;
ஆவல் கொண்டு தாவித்தேடு, மீட்பார் - மீட்படை
4. நாளைக் காகட்டென்று எண்ணி நீ தள்ளிடாய்;
நாளை என்பதுந்தன் நாளோ? வா! வா! - மீட்படை
5. வந்தால் மீட்பருன்னை அன்புடன் தாங்குவார்
இந்த நல்ல ஈவைத் தேடு இன்றே - மீட்படை
No comments:
Post a Comment