Wednesday, December 28, 2011

பாடல் 43: பாவம் போக்க வகை பாரும்


    இராகம்: காவடி சிந்து தாளம்: மிஸ்ரசாப்பு

    பல்லவி

    பாவம் போக்க வகை பாரும்; ஐயா
    தாவி உன் மெய் மீட்பர் யாரென்று தேடும்

    சரணங்கள்

1. ஆவி இருக்கின்ற கூடு என்றும்
    அழியாதிருக்கும் மேல் வீட்டையே நாடு - பாவம்

2. வாழ்வைச் சதமென்றிராதே, கெட்ட
    மாய்மாலக்காரர் வலையில் விழாதே - பாவம்

3. சாக்குபோக்கு நீ சொல்லாதே வீணாய்
    வாக்கு வாதங்களால் மனதைத் தேற்றாதே - பாவம்

4. பாவத்தின் நோயை நானுணர்ந்து, தேவ
    ஆவியால் இரட்சிப்பைக் கண்டுகொண்டேனே - பாவம்

5. இரட்சிப்பை இப்போதே தேடும் இல்லால்
    சிக்ஷிப்பார் இயேசும்மை பேய்க்கணத்தோடு - பாவம்

6. நீயுமிவ்வாதைக்குள்ளானாயோ? ஐயா
    தீய நசலிதைத் தீர்ப்பாரே இயேசு - பாவம்

No comments:

Post a Comment