Wednesday, December 28, 2011

பாடல் 44: மாண்டாரே இரட்சகர் உனக்காக


    இராகம்: இந்துஸ்தானி தாளம்: மிஸ்ர ஏகம்

    பல்லவி

    மாண்டாரே இரட்சகர் உனக்காகப் பாவி
    எத்தனை பாடுகள் பட்டாருனக்காய்

    சரணங்கள்

1. லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமக்கும்
    கோலமதைச் சிலுவையிலே பாராய்! - மாண்டாரே

2. மா பாவத்தண்டனை மாய்ப்பதற்காக
    மா பாடுபட்டு மரித்ததைப் பாராய்! - மாண்டாரே

3. மன்னிப்புண்டாகவே மத்தியஸ்தராக
    வாதைக்குள்ளானாரே தாமே நீ பாராய் - மாண்டாரே

4. பாவியான உன்னைப் பாதுகாப்பாரே
    பாவத்தை விட்டிவர் பாதத்தைத் தேடு - மாண்டாரே

No comments:

Post a Comment