சரணங்கள்
1. தாமதமேன் பாவியின்னும்
சா மதித்துனை விடுமோ?
சற்குருவின் பாதந் தேடி,
துர்க்குணங்கள் மாற்று நாடி
2. ஆவலாய் நிற்கின்றாரே
பாவியுன்னை மீட்கவென்று;
ஜீவமோசம் ஆகின்றாயே,
தாவியவர் மீட்பைத் தேடு
3. இன்று மரித்தெங்கே போவேன்
என்றுணர்ந்து இப்போதே வா;
இன்னும் ஓர் தருணமில்லை
இன்றைக்கே மனந்திரும்புவேன்
4. பாவங்களைக் கொண்டு இப்போ
பாவி வாறேன் என்று சொல்லு
ஜீவனுள்ள தேவன் அவர்
செய்வதையே வந்து பாரேன்
5. முடிவுக்குக் காலமாச்சே
மோசம் போகாதே பாவி;
கடவுள் உனக்களித்த
காலம் போதும், இரட்சையடை
No comments:
Post a Comment