இராகம்: பைரவி தாளம்: திஸ்ரம்
பல்லவி
பாவ இதயம் மாற்ற இப்போ - தாவும்! இரட்சகர்!
இவர் பாதம் தேடுமேன்
சரணங்கள்
1. எரியும் விளக்கைச் சுற்றியாடும்
சிறிய ஜந்தைப் போல - ஓர்
பெரிய வீம்பனாய் - ஆம்
திரியும் கோபியே! - பாவ
2. உலக டம்பம், உலக ஞானம்
உலகக் கல்வியாம் - இவ்
வலையில் சிக்கியே - ஓ
அலையும் பாவியே! - பாவ
3. அன்பாய் காக்கும் அப்பனாரை
அற்பமா யெண்ணும் - ஓ
சொற்ப ஞானியே - ஐயோ
தப்புவாயோ நீ! - பாவ
4. ஓட்டமாகப் பாய்ந்து வடியும்
ஆற்றின் ஜலத்தைப் போல - பாவி
நாட்கள் ஓடுதே - உன்
மீட்பின் நாளிதே! - பாவ
5. விருத்தன, வாலிபன், பிள்ளை என்று
ஒருக்காலும் பாரான் - என் நாள்
அறுக்க வல்லவன் - உன்
செருக்கைக் குலைப்பானே! - பாவ
6. வீடு, செல்வம், மாதா, பிதா
நாடு நகரமும் - விட்டுக்
காடு சேரவே - உன்
பாடை கூவுதே! - பாவ
No comments:
Post a Comment