Wednesday, December 28, 2011

பாடல் 56: எங்கள் இரட்சணிய மூர்த்தி


    பல்லவி

   எங்கள் இரட்சணிய மூர்த்தி
   எல்லாருக்கும் இரட்சகர்

    சரணங்கள்

1. மாசில்லாத மெய்த் தேவன்
    மானிட ரூபமானார்
    இரட்சண்ய மூர்த்தி என்ற
    இனிய நாமமுடையார்! - எங்கள்

2. வம்பு நிறைந்த இந்த
    மானிட ஜாதிகள் மேல்,
    அன்பு நிறைந்த பகவான்
    அதிக உருக்கமுள்ளார்! - எங்கள்

3. பாவத்தில் கோபம் வைப்பார்
    பாவிமேல் கோபம் வையார்
    ஆவலாய் நம்பும் பாவிக்
    கடைக்கலமாக நிற்பார்! - எங்கள்

4. அந்தர வானத்திலும்,
    அகிலாண்ட கோடியிலும்
    எந்தெந்த லோகத்திலும்
    இவரிவரே இரட்சகர் - எங்கள்

No comments:

Post a Comment