Wednesday, December 28, 2011

பாடல் 59: பாவத்தைச் செய்யலாகுமோ


    பல்லவி

    பாவத்தைச் செய்யலாகுமோ - பரனைவிட்டு

    சரணங்கள்

1. அல்லும் பகலும் பாவஞ்செய்தும் வில்லங்கம் வந்தும்
    நல்லுரை கேட்க வேண்டாமோ? யோசித்துப் பாரும் - பாவத்தை

2. பாவியுன் சாவிலே ஆவி பிரிந்திடும்
    சாபந்தான் நீங்கிவிடுமோ யோசித்துப் பாரும் - பாவத்தை

3. நினையாத நாளதில் தீவினை யனைத்திற்கும்
    கணக்குக் கொடுக்க வேண்டாமோ யோசித்துப் பாரும் - பாவத்தை

4. மடமட வென்றோசை வானத்திலே யொலிக்க
    தடதட தடவெனவே இயேசு வருவார் - பாவத்தை

5. நித்தம் கர்த்தரின் சத்தம் உன்னுள்ளத்திலொலித்தும்
    முக்தியைத் தேடவேண்டாமோ - யோசித்துப்பாரும் - பாவத்தை

6. துன்பத்தைச் சகித்திட்ட தேவமக்கள் எல்லாரும்
    இன்பத்தைக் கண்டு மகிழ்வார் நல் இயேசுவோடு - பாவத்தை

No comments:

Post a Comment