இராகம்: சிந்துபைரவி தாளம்: மிஸ்ரசாப்பு
பல்லவி
பாவியே துனக்கிந்தப் பெருமை - நமது
பரம குரு இராஜன் எடுத்தாரே சிறுமை!
சரணங்கள்
1. தேவாதி தேவ குமாரன் - உன்னைத்
தேடிவந்தே அவர் தாழ்மையானாரே! - பாவியே
2. பெரியோர்கள் வீடாசித்தாரோ? இல்லை
சிறியதோர் பசுத்தொழுவிலுதித்தாரே! - பாவியே
3. இராஜாதி இராஜ குமாரன் - பொல்லா
நீசருக்காக அடிமையானாரே! - பாவியே
4. நியாயாசனங்கள் முன்னின்று - வெகு
தாழ்மையாய் மறுமொழியுரைத்து நின்றாரே! - பாவியே
5. நீதிபரனான இயேசு - அநீத
வீதி பெற்றுக் குருசில் மாண்டாரே! - பாவியே
6. நாயகன் இயேசுவை அண்டு - மா
நேயராம் அவரிடம் இரட்சிப்பு உண்டு! - பாவியே
நேயராம் அவரிடம் இரட்சிப்பு உண்டு! - பாவியே
No comments:
Post a Comment