Wednesday, December 28, 2011

பாடல் 65: உலகையோர் நிலையென்றெண்ணாதே


    இராகம்: சிந்து பைரவி தாளம்: மிஸ்ரசாப்பு

    பல்லவி

    உலகையோர் நிலையென்றெண்ணாதே க்ஷணம்
    ஒழிந்து போம் உன்னோடோரடியும் வராதே!

    அனுபல்லவி

    பலமாகப் பொக்கிஷம் பரத்திலே தேடு
    பத்திரமாயங்கு இருக்குமே நீடு

    சரணங்கள்

1. நிலையாது செல்வம் எந்நாளும் - அவை
    நீர்க் குமிழ்கள் போல நிமிஷத்தில் நையும்
    உலையில் மெழுகுபோல் உருகுமே மெய்யும்
    உந்தனின் ஜீவனைப் பிரிக்குமே வீயும் - உலகையோர்

2. தீரம் புகழ் கீர்த்தி நாசம் - மற்றும்
    சேயர், மனைவி சிநேகிதர் வேஷம்;
    தாரணி முற்றுமே தவிர்த்திடல் மோசம்;
    சார்ந்திடில் ஆன்மாவுக்கென்றுமே தோஷம் - உலகையோர்

3. வானத்தின் கீழ் யாவும் பண்டு - சாலமோன்
    மாயை என்றுரைத்ததை மறவாதே கண்டு;
    இதய வுடைவோடு இயேசுவை அண்டு
    இன்பலோக நித்திய பேரின்பம் உண்டு! - உலகையோர்

No comments:

Post a Comment