இராகம்: ஆனந்தபைரவி தாளம்: ஆதி
பல்லவி
ஆவியின் கனியைக் கொடுங்கள் அதையே தேவன்
ஆவலாய்த் தேடுகிறார் பாருங்கள்
சரணங்கள்
1. பாவியே மாய்மால வேஷம் பண்ணுவது வெகுமோசம்
சாவு நினையாமல் வரும், சாபமும் தொடர்ந்துவரும் - ஆவி
2. எட்டியின் கனிகட்கிணை இயற்றுங் கருமங்களைத்
திட்டமுடனே துறந்து, திவ்விய செயல்புரிந்து - ஆவி
3. எத்தனை காலமாயுனில் ஏற்றக் கனி தேடும் வல்ல
கர்த்தனேசுவின் தவணை கடந்தால் வரும் வேதனை - ஆவி
4. வெட்டவே கோடாரி மரம் வேரிலிருந்து ஸ்திரம்
கெட்ட கனி கொடுப்பவர் திட்டமாய் வெட்டப்படுவர் - ஆவி
5. அன்புடன், சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயவு,
இன்ப நற்குணங்கள், சாந்தம், இச்சையடைக்கம், விஸ்வாசம் - ஆவி
No comments:
Post a Comment