இராகம்: நவ்ரோஜி தாளம்: ஆதி
மெட்டு: பாதகனாய் நானலைந்தேன்
மெட்டு: பாதகனாய் நானலைந்தேன்
பல்லவி
ஐயையோ நான் என்ன செய்வேன்
அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலே
மேசியா வதைக்குள்ளானார்
சரணங்கள்
1. முண்முடி சிரசில் வைத்து
மூங்கில் தடியாலடித்த
சண்டாளர் செய்கையை எண்ண
சகிக்குதில்லை எந்தனுள்ளம் - ஐயையோ
2. பெற்ற தாயார் அலறி வீழ
பிரிய சீஷர் பதறி ஓட
செற்றலர் திரண்டு சூழ
தேவே, இந்தக் கஷ்டம் ஏனோ? - ஐயையோ
3. கால் தளர்ந்து போச்சுதையா
கைகள் சோர்ந்து வீழுதையா
சேல்விழிகள் மங்குதையா
தேவே எந்தன் பாவமல்லோ - ஐயையோ
4. நா வறண்டு நடை தள்ளாட
நண்பர் கண்டு கதறி வாட
ஜீவ இம்சையே மேலாட
தேவே கொல்கதாவில் நீட - ஐயையோ
5. சிலுவை தன்னைப் பாட்டிலிட்டு
தேவே உம்மை மேல் கிடத்தி
வலுவாய் கை கால்களை இழுத்து
மாட்டினாரோ ஆணியிட்டு - ஐயையோ
6. துடிக்குதே உன் அங்கமெல்லாம்
சோர்வடைய உந்தனாவி
வெடிக்குதுந்தன் இடது விலா,
விரனீட்டியாலே குத்த - ஐயையோ
7. இந்தக் கஷ்டம் நீர் சகிக்க
வந்ததெந்தன் பாவமல்லால்
உந்தன் குற்றம் யாதுமில்லை
எந்தையே நீரே என் தஞ்சம் - ஐயையோ
No comments:
Post a Comment