Wednesday, December 28, 2011

பாடல் 72: சேர்வதெப்போது பாவி


    இராகம்: மோஹனம் தாளம்: ஆதி

    பல்லவி

    சேர்வதெப்போது பாவி - சொர்க்க இன்பத்தை
    சேர்வதெப்போது பாவி - மோட்ச இன்பத்தை
    சேர்வதெப்போது பாவி?

    சரணங்கள்

1. ஞாலத்தில் வந்த குருநாதனைப் பணியாமல்
    காலமிருக்குதென்று கவலையற்றிருந்தால் - சேர்வதெப்போது

2. அக்ஷயன் இயேசுவின் பக்ஷமதை மறந்து
    இரக்ஷையைத் தள்ளி துர் இச்சையில் திரிந்தால் - சேர்வதெப்போது

3. பாவப் பாரஞ் சுமந்து பரிதவிக்கும் பாவியைக்
    கூவி அழைத்து நிற்கும் காவலனை விட்டால் - சேர்வதெப்போது

4. திருக்கு முறுக்குப் பண்ணும் செருக்குள்ள நெஞ்சத்தைதான்
    உருக்கமுள்ள இயேசுவின் திருக்கரம் வையாவிடில் - சேர்வதெப்போது

5. உள்ளத்தைத் திறந்து நீ உண்மையை அறியாமல்
    கள்ளத்தனம் பண்ணிக் காலத்தைக் கழித்தால் - சேர்வதெப்போது

6. இரட்சகர் வந்துன்னை இரட்சிக்க நிற்கும்போது
    கட்சி பண்ணிக்கொண்டு துஷ்டனாக அலைந்தால் - சேர்வதெப்போது

No comments:

Post a Comment