இராகம்: இந்துஸ்தான் காப்பி தாளம்: மிஸ்ரம்
பல்லவி
இன்னம் நீ என்ன செய்கிறாய்?
குணப்படாமல், தாமதமென்ன?
சரணங்கள்
1. உன்னதத்திலிருந்த நாதன்
இந்நிலத் தவதரித்து
உன்னை மீட்க வந்தாரல்லவோ - ஓ! பாவி - இன்னம்
2. இரட்சண்ய செய்தி கொண்டு
தேவதாசர் வந்து நின்று
ஓதுகிறார் நீதியைத் தானே - ஓ! பாவி - இன்னம்
3. ஒவ்வொரு நாளும் உன் காதில்
இரட்சிப்பின் தொனி தொனிக்க
இன்னமும் நீ தாமதிப்பதேன்? - ஓ! பாவி - இன்னம்
4. தோழர்கள் தூஷிப்பாரென்று
தூரமாக நீ நில்லாதே
ஆவலோடெழுந்து வாராயோ - இரட்சிப்படைய - இன்னம்
5. பகிரங்கமாக இயேசு
உன் பாவத்தைக் காட்டும் நாளில்
பாவ மன்னிப்புக் கிடையாதே - ஓ! பாவி - இன்னம்
No comments:
Post a Comment