இராகம்: தேசிகதோடி முடுகு தாளம்: திரிபுடை
பல்லவி
மாற்றினார் என் னிதயத்தை
இரட்சண்ய மூர்த்தி
அனுபல்லவி
மாற்றினார் ஆத்துமத்தை
நீக்கினார் சஞ்சலத்தை
போக்கினார் பாவச் சுமை
தூக்கினார் பேதை என்னை!
சரணங்கள்
1. கல்லான நெஞ்சனானாலும், துஷ்டனெனை
வல்லான் தன் அன்பாலிளக்கி
பொல்லாத சத்துருவை வெல்லாத என்னிதயம்
சொல்லாத நன்னெறியில் எல்லா வேளையுஞ்செல்ல - மாற்றினார்
2. கொஞ்சம் என்றாலும் இணங்கி குணப்படாத
நெஞ்சைத் தம் அன்பால் கழுவி,
வஞ்சகப் பேயின் தந்திர சஞ்சல வலையினின்று
தஞ்சமாய் ஏற்றென்னுள்ளம் பஞ்சிலும் வெண்மையாக - மாற்றினார்
3. மெய் மனஸ்தாபத்துடனே வந்தால் உன்னை
கைதூக்கி நிற்பார் இரட்சித்து
பொய்யன் பேயின் வழியை மெய்யாய் நீ விட்டுவிட்டு
வையகந்தனில் நல்ல செய்கைகளைச் செய்யும்படி - மாற்றினார்
No comments:
Post a Comment