Tuesday, December 27, 2011

பாடல் 78: எத்தருணத்தில் உயிர் எவ்வழி பிரியுமோ


    இராகம்: சஹானா தாளம்: திரிபுடை

    பல்லவி

    எத்தருணத்தில் உயிர் எவ்வழி பிரியுமோ
    இதை உணராய் நெஞ்சமே!

    அனுபல்லவி

    சுத்தப் பரமன் பதம் இத்தரையில் அடைந்து
    சொர்க்கப் பதவிக் கிப்போ பக்குவம் செய்யாவிடில்

    சரணங்கள்

1. பால வயதினிலோ பாடும் சமயத்திலோ
    கோலமாய் மணக்கோலம் கொள்ளும் தருணத்திலோ
    சீலமுடன் பரனைத்தேடும் சமயத்திலோ
    காலன் வரவுகண்டு கலங்கும் தருணத்திலோ - எத்தருணத்தில்

2. வாலிபன் நான்! இப்போ வயதும் அதிகமில்லை
    காலன் வரவுக் கின்னும் காலம் அதிகமென்று
    மேலான எண்ணங்கொண்டு வீணாய்க் கழிக்கும் போதோ
    கோலொன்று கையில் தாங்கிக் குறுநடை கொள்ளும் போதோ - எத்தருணத்தில்

3. தாய் தந்தை தமர் தாரம் சகலமிருந்தாலும்
    சஞ்சீவி மருந்துகள் கைவசமிருந்தாலும்
    தீயன் வலையிற்சிக்கித் திகைக்கும் தருணமதில்
    நாயன் உதவியில்லால் நசிவது திண்ணம் திண்ணம் - எத்தருணத்தில்

4. பாவ உழையிற்பட்டு பரிதபிக்கும் பாவியை
    தேவ சுதனேயல்லால் தேடி மீட்பாரேயில்லை!
    தாவி நீ அவர் தாளில் தவித்து விழுவாயானால்
    பாவியுந்தனை அவர் பண்பாய் இரட்சிப்பாருண்மை - எத்தருணத்தில்

No comments:

Post a Comment