Monday, December 26, 2011

பாடல் 83: மனந்திரும்பு மானிடனே


    இராகம்: இந்துஸ்தான் காப்பி தாளம்: ஆதி

    பல்லவி

    மனந்திரும்பு மானிடனே - உடனே!
    தினந்தனை வீணாய்க் கழியாதே!

    சரணங்கள்

1. காலம் விலையுள்ளது கடத்தாதே
    ஞாலமதில் ஜீவன் நிலையாதே!
    காலமும் மரணமும் கடுகிடுது
    சீலன் இயேசுவை அண்டி சீர்ப்பட்டிடு - மனந்திரும்பு

2. கிருபையின் காலத்தை இழக்காதே!
    திருவசனத்தை அவமதியாதே
    தருணமறிந்து உணர்வடைவாயே
    மரணம் வருது குணப்படுவாயே! - மனந்திரும்பு

3. காயம் விட்டுயிர் தான் பிரிந்திடுமே
    மாய உலகின் மேன்மை மாய்ந்திடுமே!
    தீய வழியை விட்டு திரும்பாயோ?
    தூயனைத் தேடி இரட்சை அடையாயோ? - மனந்திரும்பு
                                                                       K.S. Abraham

No comments:

Post a Comment