Friday, December 23, 2011

பாடல் 92: மாசற்ற தேவ சுதனே!


    O spotless Lamb, I come to Thee - 450
                 (Tune: 242, 243 of ESB)

1. மாசற்ற தேவ சுதனே!
    உம்மண்டை நானிப்போ வாறேன்;
    விலங்கை நீக்கி விடுமேன்!
    தேவே! தஞ்சமென்றேன்

    பல்லவி

    பாவம் போக்கும் மீட்பா
    மாசற்ற தேவ சுதனே!
    பாவம் போக்கும் மீட்பா!

   
2. பசியினால் என் ஆத்துமம்
    தொய்ந்து வாடி அலையுதே!
    உம் அன்பினால் என்னைத் தாங்கும்
    பாவியின் நேசரே! - பாவம்

3. உட் பாவத்தால் மெலிகிறேன்
    உள் வினையை நீர் நீக்குமேன்
    துக்கத்தோடு ஜெபிக்கிறேன்
    சமாதானம் தாரும்! - பாவம்

4. மீட்பா உந்தன் ஜீவாற்றினுள்
    மெய் விசுவாசத்துடனே
    மூழ்குவதால் என் உள்ளத்துள்
    மகிழ் கொள்ளுகிறேன் - பாவம்
                           Catherine Booth - Clibborn

No comments:

Post a Comment